#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிரடி காட்டிய தவான்.. 3 ரன்னில் பறிபோன சதம்.. வலுவான நிலையில் இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய கில் 53 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகினார்.
அடுத்து களமிறங்கிய ஸ்ரேயர் ஐயர் தவானுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை நோக்கி பயணித்த தவான் துரதிஷ்டவசமாக 97 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
99 பந்துகளைச் சந்தித்த தவான் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை விளாசினார். சிறப்பாக விளையாடி 54 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் களத்தில் உள்ளனர்.