#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சைலண்டா நடந்து முடிஞ்ச பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் திருமணம்.! வரவேற்பில் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் பார்த்தீர்களா.!
ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டதால் பின்னர் இந்திய அணிக்கு தேர்வான இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் இதுவரையில் 7 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக 15வது சீசன் முழுவதும் இவர் ஆடவில்லை.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சஹார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்தநிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ் ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபங்களுக்கு சஹார் - ஜெயா இணை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.