திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆத்தாடி என்ன டைவுடா சாமி... சிக்சர் லைன் நோக்கி பந்தை அடித்த இந்திய கேப்டன்.! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ.!
இந்திய அணி 2 கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. அதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஜூலை 1இல் துவங்கிய முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நார்த்தம்டன்ஷைர் அணிக்கு போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற நார்த்தம்டன்ஷைர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நார்த்தம்டன்ஷைர் அணி 19.3 ஓவரில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் அபார வெற்றி பெற்றது.
Unbelievable. 🤯 https://t.co/bF0wtcRVUR pic.twitter.com/0iKNBSlTUe
— Northamptonshire CCC (@NorthantsCCC) July 3, 2022
அந்த ஆட்ட்டத்தில் இந்திய அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 34 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது பிரெட்டி ஹெல்ட்ரீச் வீசிய பந்தை சிக்ஸர் லைன் நோக்கி பறக்கவிட்டார். பந்தானது பவுண்டரி லைனுக்கு அருகே நின்றிருந்த வாஸ்கோன்சிலோஸ் அருகே சென்ற நிலையில் அவர் விழுந்து புரண்டு பந்தை பிடித்து தினேஷ் கார்த்திக்கை அவுட்டாக்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.