ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இந்திய அணியில் சேர்க்கப்படாத தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின்!. அவர்கள் கொடுத்த பதிலடி!.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்திய ஏ அணியில் விளையாடி வருகின்றனர். பெங்களூருவில் நடந்த தியோதர் டிராபி தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும், இந்தியா பி அணியும் மோதின.
முதலில் ஆடிய இந்தியா பி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா ஏ அணி 46.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களே எடுத்தது.
அந்த ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் 114 பந்துகளில் 99 ஓட்டங்கள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 76 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணியில் இருந்து தேர்வாளர்கள் தங்களை நீக்கியதற்கு, தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் இருவரும் பேட்டிங் திறமையால் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.