ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குடும்பத்தோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய தினேஷ் கார்த்திக்.! குழந்தைகளின் முகங்களை மறைத்த அவரது மனைவி.!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், வெளியிட்ட ஐ.பி.எல் 2022ல் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியலை வெளியிட்டார் அதில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக பார்முக்கு திரும்பியதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் மனைவி தீபிகா பல்லிக்கல் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எனக்கு எல்லாமும் ஆன உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Happy Birthday to my Everything❤️ @DineshKarthik pic.twitter.com/dPwhc13dJj
— Dipika Pallikal (@DipikaPallikal) June 1, 2022
அந்த பதிவில் இரண்டு புகைப்படங்களை அவர் வெளியிட்டார். ஒரு புகைப்படத்தில் மலர்கள் மற்றும் சுவையான உணவுகளுடன் தம்பதி காட்சியளிக்கின்றனர். மற்றொரு புகைப்படத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா தங்களின் குழந்தைகளை கைகளில் வைத்திருக்க தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் கேக் வெட்டுகிறார். குழந்தைகளின் முகம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஸ்மைலியை போட்டு அவர்களின் முகத்தை மறைத்துள்ளார்.