தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
முதல் T20: பேட்டிங்கில் தோனி; பவுலிங்கில் உமேஷ் யாதவ் - இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங்கில் தோனி சொதப்பியதும் பந்துவீச்சில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை கூட கட்டுப்படுத்த முடியாத நிலையும் தான் காரணம்.
கடைசி இரண்டு ஓவர்களில் 11 பந்துகளை சந்தித்த தோனி 10 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் தடுமாறினார். அவருக்கு எதிர்முனையில் சாகல் நின்று கொண்டிருந்தார். தோனி பவுண்டரிகள் அடிக்கும் எண்ணத்தில் பலமுறை ஒரு ரன் எடுக்கும் வாய்ப்பை தவற விட்டார். அப்படி அவர் ஒவ்வொரு ரன்னாக எடுத்திருந்தாலே இந்திய அணி மேலும் 6 ரன்கள் எடுத்திருக்க முடியும். தோனியால் 19வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஓவரில் தோனி ஒரு சிக்சர் அடித்து அந்த ஓவரில் 7 ரன்கள் எடுத்தார். இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அதே போல் கடைசி ஓவரில் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கையை 19-வது ஓவரை வீசிய பும்ரா கொடுத்தார். அந்த ஓவரில் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் இருந்தனர்.
பந்துவீச்சாளர்களை எளிதில் கட்டுப்படுத்தி விடுவார் என எண்ணிய நிலையில் கடைசி ஓவரை வீசிய உமேஷ்யாதவ் தேவையில்லாத பந்துகளை வீசி அந்த ஓவரில் 2 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டது. அதையும் மிகவும் எளிதாக தட்டிவிட்டு கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.