#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! நம்ம தோனியா இது! நட்சத்திர ஹோட்டலில் மனைவியோடு இப்படியொரு ஆட்டமா? காணக்கிடைக்காத அரிய வீடியோ!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் தல தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் தோனிக்கென தனிரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தோனி சென்னை அணியின் தலைவராக இருந்து பல முறை வெற்றி பெற்று பெருமை அடைய செய்துள்ளார்.
இவரது மனைவி சாக்ஷி. இருவரும் அனைவருக்கும் சிறந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர்.மேலும் இருவரும் ஒன்றாக பல விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் நேற்று புத்தாண்டு விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல பிரபலங்களும் மிகவும் உற்சாகமாக புதுவருடத்தை வரவேற்றனர். இந்நிலையில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்களுடைய நண்பர்களுடன் புத்தாண்டை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
மேலும் அப்பொழுது தோனி தனது மனைவியை கட்டியணைத்து நடனம் ஆடியுள்ளார். பின்னர் அனைவரிடமும் வாழ்த்துக்களை கூறினார். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
Here’s an adorable video from Mahi & Sakshi’s new year celebration.
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 1, 2020
A rare dancing clip of @msdhoni to make our year special!❤️😍#Welcome2020 #Dhoni #MSDhoni pic.twitter.com/E8yLW6NC5T