தோனிக்கு கொரோனா பரிசோதனை.. முடிவு என்ன?



Dhoni corono test is negative

வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் விரைவில் அந்நாட்டிற்கு பயணம் செய்யவுள்ளனர்.

வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் யூஏஇக்கு புறப்படும் முன்பு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அனைத்து வீரர்களுக்கும் அவரவர் சொந்த ஊர்களிலேயே முதல்கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தோனிக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து தோனி சென்னைக்கு பயணம் செய்து 6 நாள் பயிற்சியில் ஈடுபட எந்தவித தடையும் இல்லை. அதன் பிறகு அவர் யூஏஇக்கு அணி வீரர்களுடன் புறப்படுவார்.