மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோகத்தில் இருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தோனி வெளியிட்ட வீடியோ!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் கடந்த 15 ஆண்டுகளாக குடிகொண்டிருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சமீபத்தில் சில தோல்விகளை சந்தித்தாலும் ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியை பற்றி பலரும் பல விதமாக விமர்சித்தாலும் தோனியின் ரசிகர்கள் மட்டும் அவரை கீழே விடாமல் உயர்வாக பேசி வருகின்றனர். அதற்கு காரணம் ஒரு முடிவை நோக்கி போராடும் குணம் கொண்ட அவரது விடா முயற்சி தான்.
அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு தன்னால் இயன்ற ஒரு அன்பான அறிவுரையை கூறியுள்ளார் தோனி. அதில், "ஒரு சரியான முடிவு என்பது அதற்கான வேலைகளை நாம் எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்து தான் அமையும். நாம் செய்யும் செயல்களால் உருவாவது தான் முடிவு. ஆனால் சமீபகாலமாக செய்யும் செயல்கள் குறித்து சிந்திக்காமல் வெறும் முடிவை பற்றியே யோசிக்கிறோம்.
எனவே நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். அப்பேது நமக்கு விருப்பமான முடிவு நிச்சயம் கிடைக்கும். அதைவிட்டுவிட்டு செய்யத் தவறியவைகளை பற்றி நாம் குற்றம் சாட்டுகிறோம். நாம் என்ன செய்கிறோமோ அதனைப் பொறுத்து தான் முடிவு அமையும்.
நாம் ஒரு முடிவினை பெற சரியான விதத்தில் நம்மையே தயார் செய்து, அதை சரியான விதத்தில் செயல்படுத்தி, நமக்கு நாம் உண்மையாக இருந்தும் நமக்கு தேவையான முடிவு கிடைக்கவில்லையெனில் அதைக் கண்டு துவண்டுவிட கூடாது. இந்த தோல்வி குறுகிய காலத்திற்கு மட்டுமே. இதுவும் நமக்கு ஒரு பாடம் தான்" என தெரிவித்துள்ளார்.
Hopefully we all need this...!!
— Prabhakar (@prabha_k_baddie) July 12, 2019
Mainly civil Aspirants..!! Save this video and do watch whenever you need this!!
Have a great day😇#DhoniInBillionHearts #donotretiredhoni#FridayFeeling #FridayThoughts #FridayMotivation pic.twitter.com/qPrmuySOp2