"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தனது ஊருக்கு வந்த இந்திய வீரர்களுக்காக தோனிசெய்த அசத்தலான செயல்! வைரலாகும் புகைப்படம்.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இதனையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற புள்ளியில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைப்பெற உள்ளது. அந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து தோனி தனது ஹம்மர் சொகுசு காரில் அழைத்துச்சென்றுள்ளார். மேலும் அந்தக் காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி தோனி - சாக்ஷி தம்பதியினர் இந்திய வீரர்கள் அனைவரையும் தங்களது வீட்டிற்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.