CSK ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! 2020 ஐபிஎல் சீசனில் தோனி ஆடுவது உறுதி



Dhoni will be Captian for 2020 ipl

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 12 சீசன்கள் முடிவடைந்துள்ளன. 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 

ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் மகேந்திர சிங் தோனி, தடைக்காலம் தவிர. இவரது தலைமையில் சென்னை அணி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

MS Dhoni

தற்போது உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அனைவரின் கவனமும் அணியின் மூத்த வீரரான தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று தான். ஒருவேளை தோனி தற்போதே ஓய்வை அறிவித்துவிட்டால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா என்ற கவலை சென்னை ரசிகர்களுக்கு.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ளது என்றும் அதுவரை அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.