கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
அந்த கேட்சை நீங்க பாக்கலையா.. மின்னல் வேகத்தில் கேட்சை பிடித்து வீசிய ஹார்டிக்கின் அசத்தலான வீடியோ இதோ..!
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் துவக்க பந்துவீச்சாளர்களான சமி மற்றும் சிராஜின் வேகத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி முதல் 9 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சமி 2 மற்றும் சிராஜ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து 10 ஆவது ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியாவையாவது சமாளித்து விடலாம் என்று எண்ணிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஹார்டிக் பாண்டியாவின் கேட்ச் அமைந்துவிட்டது. பாண்டியா வீசிய பந்தினை கான்வே நேர் திசையில் தட்டிவிட்டார்.
பந்து தரையோடு வந்ததால் மைதானத்தில் இருந்த பலருக்கு பந்து எங்கே சென்றது என தெரியவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் விக்கெட்டினை கைப்பற்றிய உற்சாகத்தில் துள்ளினர். அதன் பிறகே தரையோடு வந்த பந்தினை கீழே விழுந்து பாண்டியா ஒற்றை கையால் கேட்சினை பிடித்தது தெரிந்தது. அந்த அசத்தலான கேட்சினை நீங்களும் பார்த்து ரசித்திடுங்கள்.
𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗖𝗔𝗧𝗖𝗛! 😎
— BCCI (@BCCI) January 21, 2023
Talk about a stunning grab! 🙌 🙌@hardikpandya7 took a BEAUT of a catch on his own bowling 🔽 #TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/saJB6FcurA