"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
ஒவ்வொரு செகண்டும் வேற லெவல்! பார்ப்போரை மிரளவைத்த ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா ட்ரைலர்!!இதோ..
தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் அசத்தலாக நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. இந்த படத்தை ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கியுள்ளார்.
பதினெட்டு ரீல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேப் கார் டிரைவராக நடித்துள்ளார். டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து இருபோஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா பட ட்ரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.