தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
முதல் இன்னிங்சில் முக்கிய வீரர்களை வீழ்த்தி அசத்திய ஒல்லி ராபின்சன்.! 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் இடை நீக்கம்.!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேட்பன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டெவென் கான்வே அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் போன்றவற்றைச் சிறப்பாக வீசி ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து ரசிகர்களை வியக்கவைத்தார். இதனால், இணையத்தில் ராபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன. ஆனால் அந்த புகழ்ச்சிகள் நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டுவீட்தான் தான் என தெரியவந்துள்ளது.
8 வருடங்களுக்கு முன்பு சில டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை தற்போது வெளிக்கொண்டு வந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதில் இனரீதியான கருத்துகளை ஒல்லி ராபின்சன் டுவிட்டரில் பதிவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.