மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி..! முதலில் பந்துவீச்சை தேர்வு.! யாரெல்லாம் டீம்ல இருக்காங்க..?
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இறுதிப்போட்டிக்கு எப்படியாவது செல்ல வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளும் முனைப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடும் லெவன் இந்திய அணி: கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
ஆடும் லெவன் இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர்,அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்