#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இங்கிலாந்து அணியை திணறவைத்த சூர்யகுமார் யாதவ்.! கஷ்டப்பட்டும் வீணாப்போன ஆட்டம்.!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில், நேற்று மூன்றாவது டி-20 போட்டி நடைபெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் பண்ட் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலியும் 11 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் சிறப்பாக ஆடி 55 பந்துகளை 14 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என விளாசி 117 ரன்கள் குவித்து, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 198 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.