மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோகித் சர்மாவால் மருத்துவமனையில் பரிதாப நிலையில் ரசிகர்.! என்ன நடந்தது.?
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர் பெர்னாண்டோ வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று அந்த ரசிகரின் முகத்தில் பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அந்த ரசிகரை மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்துள்ளனர். அந்த ரசிகரின் முகத்தில் பந்து பலமாக தாக்கியதில் அவரின் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளாதாகவும், மேலும் தையல் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக போட்டிகளின் போது ரசிகர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் இப்படி தையல் போடும் அளவிற்கு ஆனது பேசுப்பொருளாகியுள்ளது.