ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மைதானத்தில் முரளி விஜயை வெறுப்பேற்றிய ரசிகர்கள்..! கைகூப்பி நிறுத்த சொன்ன முரளி விஜய்.! என்ன காரணம்.!
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திருநெல்வேலியில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.
தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய், தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், போட்டி ஒன்றில் முரளி விஜய் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் பலர் மைதானத்திலிருந்து 'DK.. DK..' கூச்சலிட்டனர்.
#TNPL2022 DK DK DK ......
— Muthu (@muthu_offl) July 7, 2022
Murali Vijay reaction pic.twitter.com/wK8ZJ84351
இதனை கவனித்த முரளி விஜய் ரசிகர்களிடம் கைகூப்பி கூச்சலிடுவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதாவை தான் முரளி விஜய் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் தமது தனிப்பட்ட வாழ்க்கையை கிரிக்கெட் மைதானத்துக்கு கொண்ட வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கைக் கூப்பி முரளி விஜய் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.