சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
WC2019: நாடு விட்டு நாடு சென்றும் ஆட்டத்தை காணமுடியாததால் ரசிகர்கள் போராட்டம்! நடந்தது என்ன?
இங்கிலாந்தில் நடந்து வரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் பாக்கிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டத்தில் டிக்கெட் சரியாக விநியோகம் செய்யாததால் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழன்று துவங்கிய ஐசிசி உலககோப்பையின் இரண்டாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை நாட்டிங்காமில் நடந்தது. இந்த ஆட்டம் மொத்தமே 36 ஓவர்களில் முடிந்துவிட்டது. முதலில் பேட்டிங் செய்த பாக்கிஸ்தான் அணி 22 ஆவது ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ஆவது ஓவரிலே வெற்றிபெற்றது.
அந்த போட்டியின் பொது மைதானத்திற்குள் நடந்த பரபரப்பை விட மைதானத்திற்கு வெளியே நடந்த போராட்டம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஐசிசி முறையாக முன்கூட்டியே ரசிகர்களுக்கான டிக்கெட்டுகளை பிரிண்ட் செய்து வைக்காமல் இருந்தது தான்.
வெளிநாடுகளில் இருந்து தங்களது அணிகள் ஆடும் ஆட்டத்தினை பார்க்க ரசிகர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐசிசி ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆட்டத்தினை பார்க்க வரும் போது ரசிகர்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டினை நிச்சயம் எடுத்து வர வேண்டும். இதனால் புக் செய்த அனைவருக்கும் ஐசிசி சார்பாக டிக்கெட்டுகள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என உலகக்கோப்பை தொடர் மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த டிக்கெட்டுகள் சரியாக அனைவருக்கும் சென்றடையாததால், வேறு வழியின்றி ரசிகர்கள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பே மைதானத்திற்கு வந்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியின் போது ஐசிசி போதுமான அளவிற்கு டிக்கெட்டுகளை ஏற்கனவே பிரிண்ட் செய்து வைக்கவில்லை.
இதன் காரணமாக ரசிகர்கள் சரியான நேரத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆட்டத்தை காணமுடியவில்லை. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் வெறும் 22 ஓவரிலே முடிந்துவித்ததால் சில ரசிகர்கள் முதல் இன்னிங்க்ஸை பார்க்கவே முடியாமல் போனது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ரசிகர்கள் அதிகமாக வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஐசிசிக்கு எதிராக மைதானத்திற்கு வெளியே நின்று போராட்டம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள உலகக்கோப்பை தொடர் மேலாளர், அன்றைய ஆட்டத்தினை முழுமையாக காண முடியாத ரசிகர்களின் டிக்கெட்டுக்கான தொகையினை திரும்ப செலுத்திவிடுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாக்கிஸ்தான் ரசிகர் ஒருவர், இவ்வளவு மைல் தூரம் கஷ்டப்பட்டு விசா எடுத்து, பிலைட் டிக்கெட் எடுத்து ஒரு ஆட்டத்தினை பார்க்க வரும் எங்களுக்கு ஐசிசி திருப்பி தரும் டிக்கெட் தொகை ஒரு விஷயமா? நான் அடுத்து இந்திய - பாக்கிஸ்தான் ஆட்டத்திற்கு டிக்கெட் வாங்கியுள்ளேன். இந்த ஆட்டத்தை பார்க்க தான் நான் இவ்வளவு சிரமப்பட்டு இங்கே வந்துளேன். இதுபோன்ற சம்பவம் அந்த ஆட்டத்தின் போது நடக்காமல் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.