ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிறந்த மேட்ச் பினிஷர் தோனியை ஓரங்கட்டிய தமிழக வீரர்.! கொண்டாடும் ரசிகர்கள்.!
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுவரை நடைபெற்ற தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தோனி சிறந்த மேட்ச் பினிஷர் என்ற காலம் மலையேறிவிட்டது, அதற்கு பதிலாக பெங்களூரு அணிக்காக விளையாடும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார் என இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Dinesh Karthik in IPL 2022:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 5, 2022
32* (14) Vs PBKS.
14* (7) Vs KKR.
44* (23) Vs RR.
- DK, the finisher, the match winner, the game changer! pic.twitter.com/w97CcgeHeJ
இது தோனி ரசிகர்களுக்கு மனவருத்தத்தை தந்தாலும், தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.