எதிர்பார்த்தது போலவே அரையிறுதியில் குறுக்கிட்டது மழை! ஆட்டம் நிறுத்தப்பட்டது



first-semifinal-stopped-due-to-rain

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் அனல் பறக்க பந்து வீசினர். முதல் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் மார்டின் கப்டில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

wc2019

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் மிகவும் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க நீண்ட நேரம் போராடிய இந்திய அணிக்கு 19 ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஜடேஜாவின் பந்தில் நிகால்ஸ் போல்ட் ஆகி வெளியேறினார்.

wc2019

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் 35 ஓவர்கள் வரை நிதானமாக ஆடினர். அரை சதம் அடித்த வில்லியம்சன் 26ஆவது ஓவரில் 67 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்தில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நீசம் மற்றும் கிராண்ட் ஹோம் விக்கெட்டை பறிகொடுத்தனர். 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. ராஸ் டெய்லர் 67 இரண்டிலும் தாம் லேப்டாப் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.