35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
சர்வதேச ஐ.சி.சி போட்டியில் முதல் பெண் நடுவராக களமிறங்கும் இந்திய பெண்!
ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 12 நடுவர்கள் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனை பெண் நடுவரான ஜி.எஸ்.லட்சுமியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் ஐசிசியால் நடத்தப்படும் சர்வதேச தொடர் ஒன்றில் போட்டி நடுவராகப் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற சாதனையை ஜி.எஸ்.லட்சுமி படைக்கவுள்ளார்.
Nitin Menon is the lone Indian in ICC’s list of umpires for the upcoming Women’s T20 World Cup in Australia, while GS Lakshmi will become the first woman match referee at a global ICC event 👇👇#ICC #T20WorldCuphttps://t.co/E0MR4qIIpe
— Sportstar (@sportstarweb) February 12, 2020
இந்த மாதம் பிப்ரவரி 22 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் மற்றும் தாய்லாந்து பெண்கள் அணிக்கெதிரான போட்டியில் நடுவராக பணியாற்ற உள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனை பெண் நடுவரான ஜி.எஸ்.லட்சுமி.
கடந்த ஆண்டு, அபுதாபியில் நடந்த ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 இன் மூன்றாவது தொடரின் துவக்க ஆட்டத்தில் நடுவராக களமிறங்கிய ஜி.எஸ். லட்சுமி, சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.