ஐபிஎல் தொடர் மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளதா.? கங்குலி என்ன தெரிவித்துள்ளார் பார்த்தீர்களா.?
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தவருடம் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து வீரர்களின் நலன் கருதி தற்போது ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தி வரும் பிசிசிஐ ஐபிஎல் தொடர் இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், இந்தியாவில் நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை. இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது நிலை அக்டோபர் நவம்பர் மாதங்களில் வரும் என்று மருத்துவ குழுவினர் கூறியுள்ளதால் நிச்சயம் இந்தியாவில் இந்த தொடரை நடத்த வாய்ப்பு இல்லை என கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு போன்று இந்த முறையும் ஐக்கிய அரபு அமீரகத்திலே நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.