கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல்லின் புதிய விதிமுறைகள்! இறுதிப்போட்டி எங்கு நடைபெறும்? வெளியிட்டார் கங்குலி!
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 13 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24- ஆம் தேதி நடைபெறும் என்றும், ஐபிஎல் இரவு விளையாட்டுகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி, இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில் ஐபிஎல் போட்டி தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டி துவங்கும் என தெரிவித்தார்.
நடக்கும் போட்டிகளில் விதிமுறைகள் என்றால், நோபாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகியுள்ளது. போட்டியின் இடையே வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் களம் இறங்கி விளையாட முடியும் என தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி மும்பையில் தான் நடைபெறும் எனவும் போட்டியின் அட்டவணை தொடர்பான அனைத்து விவரங்களும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விரைவில் வெளியிடுவார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.