ரோகித் சர்மாவை நீக்கியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் - கவாஸ்கர் கேள்வி!



Gavaskar raises question for not picking rohit sharma in india squad

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் தேர்வு நேற்று நடைபெற்றது.

மூன்று வகையான தொடர்களிலும் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடவில்லை.

Rohit sharma

ஆனால் நேற்று ரோகித் சர்மா பயிற்சி மேற்கொண்ட வீடியோவை மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டது. அவருக்கு காயம் அதிகமாக இருந்திருந்தால் எப்படி பயிற்சி மேற்கொள்வார்? இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறாததற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மாவை இந்திய அணியில் சேர்க்காததற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.