39 வயதில் புதிய உலக சாதனை படைத்த கிரிஸ் கெய்ல்!



Gayle hits highest sixers

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் வென்றதையடுத்து தற்போது ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. 

39 வயதான கிரிஸ் கெய்ல் 6 மாதம் ஓய்விற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்த ஒருநாள் போட்டியில் ஆடினார். இந்த போட்டியில் அதிரடி காட்டிய கெய்ல் 129 பந்துகளில் 12 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் எடுத்தார். இது இவரது 24 ஆவது சதமாகும். 

Chrish gayle

இந்த போட்டியில் 12 சிக்சர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கெய்ல். இவர் மொத்தம் 477 சிக்சர்கள் விளாசி 476 சிக்சர்கள் அடித்திருந்த சாகத் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார். 

444 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல் ஒருநாள் போட்டியில் 276, T20 போட்டியில் 103, டெஸ்ட் போட்டியில் 98 சிக்சர்கள் விளாசியுள்ளார். இந்த வரிசையில் மெக்கல்லம்(398), ஜெயசூர்யா(352), ரோகித் சர்மா(349) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.