ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட தினேஷ் கார்த்திக்.! இந்திய அணி கேப்டனை சரமாரியாக விளாசிய பிரபல வீரர்.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அப்போது கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் நுழைந்த தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பினிஷெர் என்பதால் கடைசியில்தான் களமிறங்க வேண்டுமென்ற சட்டம் உள்ளதா கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தினேஷ் கார்த்திக் போன்றவரை முன்னதாகவே களமிறக்கியிருக்க வேண்டும் என்று கேப்டன் ரிசப் பண்ட்டை விமர்சித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர். அவர் அக்சர் படேலுக்கு முன்பு களமிறங்கியிருக்க வேண்டும். அப்படி இறக்கியிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் அதிகரித்திருக்கும் என கூறியுள்ளார்.