மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர் வெற்றிகளை குவிக்கும் குஜராத் டைட்டன்ஸ்..!! டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது..!!
டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 6 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடந்த 7 வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா-டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கியது. பிரித்வி ஷா 7, மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் முகமது ஷமியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அபிஷேக் போரல் 20, சர்ப்ராஸ் கான் 30 ரங்களில் வெளியேறினர்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ரன் சேர்த்த அக்ஸர் படேல் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களின் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளும், ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 163 ரன்கள் இலக்கை துர்த்திய குஜராத் அணிக்கு விருதிமான் சஹா- சுப்மன் கில் ஜோடி தொடக்கம் அளித்தது. தொடக்க ஜோடியில் சஹா, சுப்மன் கில் தலா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன் பின்னர் இணைந்த சாய் சுதர்சன்-விஜய் சங்கர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் ரன் ரேட்டை நிதானமாக உயர்த்தினர். முக்கிய கட்டத்தில் விஜய் சங்கர் 29 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாட, நிதானமாக ஆடிய சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
மேலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 18.1 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 62 (48) ரன்களும், டேவிட் மில்லர் 31 (16) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக நாட்ஜ் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. அந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 வது ஐ.பி.எல் தொடரின் பிளே-ஆப் சுற்றில் இருந்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் குஜராத் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.