மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட்டில் இவர் தான் பெரிய வீரர்! புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன்! யார் அந்த வீரர்?
2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் கொரோனா காரணமாக தற்போது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் கூறுகையில், "அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல நாடுகளுக்கு சென்று விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில், கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர் தோனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை.
தல தோனி நீண்ட இடைவெளிக்குப் பிறகு
2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக கடந்த மாதம் சென்னை வந்தார். ஆனால் கொரோனா காரணமாக 2020 ஐபிஎல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் எம்.எஸ்.தோனி இருப்பாரா என்பது குறித்த கேள்விக்கு ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தல தோனி குறித்து ஹர்பஜன் கூறுகையில், தோனி இந்தியாவின் மிகச் சிறந்த வீரர், அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக நிறையச் செய்திருக்கிறார், கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரர் என்றால் அது தோனி தான் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.