மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டோன்ட் வொரி டீம்... நான் இருக்கிறேன் வாங்க தூள் கிளப்பலாம்..! ஹர்திக் பாண்ட்யா என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா..!
இந்தியாவில் 13 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இந்தநிலையில் லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அந்தவகையில் உலகக்கோப்பையில், இந்திய அணி வெற்றிகரமாக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் 2 -வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து கூறுகையில், 'ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியின் தன்மை சிறப்பானது. அவர் எந்த சூழ்நிலையிலும் மற்ற வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார். எதிரணியினர் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றாலும் கூட, கவலைப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என கூறுவார்' என்று அவர் கூறினார்.