மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோகத்திற்கு முடிவு கட்டி எழுச்சி பெறுமா சன் ரைசர்ஸ்?!!.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்..!!
ஐ.பி.எல் தொடரின் 4 வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய 16 வது சீசனில், முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில் குஜராத் அணி வெற்றி பெற்றது. லக்னோ-டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், லீக் சுற்றில் ஞாயிற்றுகிழமையான இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 15 வது ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 8 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த அணி நிர்வாகம் கடந்த மினி ஏலத்தில் அணிக்கு புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த எய்டன் மார்க்ராம் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து அணியுடனான சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள எய்டன் மார்க்ராம் இன்னும் ஐதராபாத் அணியுடன் இணையாததால், இன்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார் அந்த அணியை வழி நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அடில் ரஷித், டி.நடராஜன், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி மற்றும் அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கு, ரன் குவிப்பில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர் (4 சதம் உட்பட 863 ரன்கள்), விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தை பிடித்த யுவேந்திர சாஹல் (27 விக்கெட்) மற்றும் ஜோ ரூட், தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஆர்.அஸ்வின், ஆடம் ஜம்பா மற்றும் நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்களுடன் வலுவாக உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 16 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா 8 வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.