மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நமக்கு கிடைத்த பரிசு! பிரபல கிரிக்கெட் வீரரின் பிறந்தநாளில் ஐசிசி வெளியிட்ட தரமான மாஸ் வீடியோ!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் முன்னாள் வீரர் பிரைன் லாரா. அவர் இன்று தன்னுடைய 51வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு பல நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐசிசி, 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸை அரையிறுதிக்கு முன்னேற்றிய பிரைன் லாராவின்கிரிக்கெட் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
மேலும் அதில் இன்று பிரைன் லாராவின் பிறந்தநாள். இவரது இன்னிங்ஸ்கள் அனைத்தும் நமக்கு கிடைத்த பரிசு. அவரது சாதனைகளிலிருந்து, 1996 ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில், இளவரசரின் தரமான தருணம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 94 பந்துகளில், 111 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ்சை அரையிறுதிக்குக் கொண்டு சென்றது என பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
It's Brian Lara's birthday, but this gem of an innings is a gift for all of us 😍
— ICC (@ICC) May 2, 2020
From the archives, a classic from the Prince in the 1996 @cricketworldcup. His 111 from 94 balls against South Africa carried West Indies to the semi-final 🍿 pic.twitter.com/YTbPu2jAut