மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் மொழியை கௌரவப்படுத்திய ஐசிசி! தூக்கி வீசப்பட்ட இந்தி!
2019 உலகக்கோப்பையில் தமிழ் மொழியை ஐசிசி கவுரவப்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டியின் பொது இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளின் கேப்டன்கள் இருவரும் பேசியவற்றை தமிழ் மொழியில் சப்டைட்டில் செய்து வெளியிட்டது ஐசிசி.
நேற்று லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. இந்தியாவிலேயே கிரிக்கெட் மீதான அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். இந்திய தோற்றாலும், ஜெயித்தாலும் மற்ற அணிகள் ஆடும் ஆட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை ரசிகர்கள் அதிகமாகவே அளித்து வருகின்றனர்.
தமிழக ரசிகர்களின் ஆதரவு பார்த்து வெளிநாட்டில் இருந்து விளையாட வரும் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தமிழில் ட்வீட் போட ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றய உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளின் கேப்டன்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசியவற்றை சில மொழிகளில் சப்டைட்டில் போடு வெளியிட்டது ஐசிசி. இந்தநிலையில் நேற்று இரு அணி கேப்டன்கள் பேசிய வீடியோக்களுக்கு தமிழ் மொழியில் சப்டைட்டில் கொடுத்து தமிழ் மொழியை கவுரவப்படுத்தியுள்ளது. இதனை தமிழக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மேலும், இந்தி மொழியை ஐசிசி சப் டைட்டில் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.