ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஐசிசி டி20 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்.! அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி.! கெத்து காட்டும் இலங்கை வீரர்கள்.!
டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதேபோல் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 4 இடம் குறைந்து 10-வது இடத்துக்கு பின்தங்கினார். இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா 13-வது இடத்தில் உள்ளார். துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் இலங்கை வீரர்கள் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இலங்கையின் பதும் நிஷங்கா 654 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார். கடந்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய தொடரில் 8 டி20 போட்டிகளிலும் பதும் நிசாங்கா விளையாடினார். இந்த இரு தொடர்களிலும் 32.5 என்ற சராசரியுடன் அவர் 260 ரன்களை எடுத்துள்ளார்.
டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் துஷ்மந்தா சமீரா 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே போல இலங்கையின் இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள வனிந்து ஹசரங்கா 6வது இடத்தில் உள்ளார். டி20 ஆல்ரவுண்டர் பட்டியலில் ஹசரங்கா 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.