#INDVsSA: வாஷவுட் ஆகும் தென்னாபிரிக்கா?.. வெற்றிக்கொடி நாட்டுமா இந்தியா?..!



IND Vs SA Match T20 3rd Match

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டுள்ளது. முதல் இரண்டு ஆட்டத்திலும் தென்னாபிரிக்க அணி தோல்வியை சந்தித்துள்ளது. இறுதி போட்டி 4ம் தேதியான இன்று இந்தூரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

ind vs sa

தனது முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை 106 ரன்களில் சுருட்டி வெற்றியடைந்த இந்தியா, 2வது ஆட்டத்தில் 221 ரன்களில் சுருட்டியது. இறுதி போட்டியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள பிசிசிஐ, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மூன்றிலும் வெற்றி என்ற எண்ணத்தில் செயலாற்றி வருகிறது. 

ind vs sa

அதன்படி, விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், ஷபாஸ் முகமதுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். தென்னாபிரிக்க அணியை இந்தியா வாசவுட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.