மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபார வெற்றி! டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி
ஜமைக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 416 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ஹனுமா விஹாரி முதல் இன்னிங்ஸில் 111 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 53 ரன்களும் விளாசினார்.
முதல் இன்னிங்சில் பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய மேற்கிந்திய தீவுகள் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பும்ரா மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் நேற்று நடந்த நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்ற இந்திய அணி இந்தத் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக இந்திய அணியின் ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார்.மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 120 புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.