#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"4 ஓவர் 4 ரன் 3 விக்கெட்" இந்திய அணி மோசமான துவக்கம்!
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நான்கு ஓவரிலேயே நான்கு ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் மற்றும் அலெக்ஸ் கேரே, கலீல் அகமது, புவனேஷ்குமார் வீசிய முதல் இரு ஓவர்களில் தடுமாறினார்கள். புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். 96 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய 12-வது இந்திய வீரர் எனும் பெருமையையும் புவனேஷ்குமார் பெற்றார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரம் நிதானமாக ஆடிய அலெக்ஸ் கேரே பத்தாவது ஓவரில் குலதீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் பொறுமையாக ஆடி அரைசதம் அடிக்க கவாஜா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சு அவுட்டானார். டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய ஷான் மார்ஷ் இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த மார்ஸ் 54 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் ஹான்ஸ்காம்புடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டாய்னிஸ். ஹான்ஸ்காம்ப் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக எதிர்கொண்டார். அவ்வப்போது பவுண்டரிகளையும் சிக்சர்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதம் அதிகரிக்க துவங்கியது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹான்ஸ்காம்ப் 48 ஆவது ஓவரில் புவனேஷ்குமார் பந்தில் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் 61 பந்துகளில் 6 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடினர். மேக்ஸ்வெல் 11 ரன்களும் ஸ்டாய்னிஸ் 47 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா துவக்கத்திலிருந்தே தடுமாறினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அறிமுக பந்துவீச்சாளர் பெகரண்ட்ஆப் பந்தில் ஷிகர் தவன் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி 4-வது ஓவரில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அவரை தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இந்நிலையில் 4 முடிவில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் டோனி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.