கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
பங்களாதேஷை பந்தாடி இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 கிரிக்கெட் உலக்கோப்பையில் பங்களாதேஷை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது வெற்றியை பெற்றது.
இன்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 17 பந்தில் 39 ரன்கள் அடித்து அருமையான துவக்கத்தை அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோட்ரிஹியூஸ் 34 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் நிதானமாக ஆட்டத்தை துவங்கினர். ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய துவங்கின.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே பெற்றனர். அதனைத் தொடர்ந்து இந்தய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பூனம் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷபாலி வர்மா ஆட்ட நாயகி விருதினை பெற்றார். ஏற்கனவே முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை இந்தியா வீழ்த்தியது.