மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்.? இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.! இந்திய ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு.!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 16ம் தேதியன்று தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய அணியில் கடந்த ஆட்டங்களில் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் பிற அணியினரை மிரளவைத்தது. இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் என முக்கிய வீரர்கள் உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி வெற்றிபெறவேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.