#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாழ்வா சாவா போட்டியில் ஆரம்பத்திலையே இந்திய அணிக்கு அதிர்ச்சி!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் முடிவு பெற்று இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெறும்.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி முதலில் பேட் செய்த அணைத்து போட்டிங்களிலும் அசத்தல் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது பேட்டிங்கில் இந்திய அணி தோல்வியையே தழுவியது.
இந்நிலையில் இன்றும் இந்திய அணி இரட்டைவது பேட்டிங் என்பதால் இன்று இந்திய அணி வெற்றிபெறுமா? இறுதி சுற்றுக்கு செல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.