இந்திய அணி அதிரடி தொடக்கம். சதமடித்த ப்ரீத்வி ஷா; சதத்தை நெருங்கும் புஜாரா.



india vs west indies 1st test

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைப்பெறுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரரான பிரித்வி ஷாவின் சிறப்பான சதத்தால் ஒரு விக்கெட் இழப்பிற்கு 201  ரன்களை வேகமாக எட்டியுள்ளது. 

Tamil Spark

முதல் உணவு இடைவேளையின் போது இந்தியாவின் பிரித்வி ஷா 74 பந்தில் 75 ரன்களும், புஜாரா 74 பந்தில் 56 ரன்களும் எடுத்து 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை குவித்திருந்தனர். அதன் பிறகு 41 ஓவர்களில்  201/1 என்ற நிலையில் ப்ரித்வி ஷா 120 பந்தில் 109 ரன்களும் புஜாரா 124 பந்தில் 85 ரன்களும் குவித்தனர்.

Tamil Spark

இந்திய ஆடுகளங்களில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணி ஒரு நாளில் சராசரியாக 300 ரன்களை எடுக்கும். அந்த வகையில் இன்று நடைபெறும் போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி வருகிறார். அதனை தொடர்ந்து புஜாராவும் வழக்கத்துக்கு மாறாக வேகமாக ரன் குவித்து வருகிறார்.