மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குறைவான இலக்கிலும் வெஸ்டிண்டிஸ் அணியிடம் தடுமாறும் இந்தியா! வெற்றிபெறுமா?
உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் முதல் T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்டிண்டிஸ் அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி சார்பாக கிரண் பொல்லார்ட் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வீரர் நவதீப் சைனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெஸ்டிண்டிஸ் அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனை அடுத்து 96 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 7 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்துள்ளார். தற்போது மூன்று ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.