#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நின்று நிதானமாக ஆடிய விராட் கோலி! தென்னாப்பிரிக்காவை ஓடவிட்ட இந்திய அணி!
டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். புதிய கேப்டன் டி காக் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். டி காக் நின்று அதிரடியாக ஆடி 37 பந்துகளை 52 ரன்கள் எடுத்து விராட் கோலியிடம் கேக் கொடுத்து வெளியேறினார். ஹென்ரிக்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய டஸ்ஸன் 1 ரன்னும் , மில்லர் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தநிலையில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய விராட் கோலி 72 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தநிலையில் 19 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.