கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கடைசி ஓவரின் கடைசி பந்தில் திக்..திக்.! துல்லியமாக வீசிய உம்ரான்.! தொடரை கைப்பற்றிய இந்திய அணி.!
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது T20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 228 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது.
இறுதியில் அயர்லாந்து அணிக்கு உம்ரான் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் 9 ரன்கள் எடுத்தனர். மீதமிருக்கும் 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டன. இறுதியில் அயர்லாந்து அணி வெற்றிபெற கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், உம்ரான் துல்லியமாக வீசியதில் 1 ரன் மட்டுமே எடுக்கமுடிந்தது. அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தநிலையில் இந்திய அணி 2-0 என T-20 தொடரை கைப்பற்றியது.