#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
3rd ODI: டாஸ் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றுமா! எகிரும் எதிர்பார்ப்பு
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ரான்ஜியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 6 விக்கெட் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ரான்ஜியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் வண்ணம் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து விளையாடுகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. தோனியின் சொந்த மைதானம் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலியா அணியில் குல்டர் நெயிலுக்கு பதில் ரிச்சட்சன் களமிறங்குகிறார். இந்த போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றுமா இல்லை ஆஸ்திரேலிய அணி அதனை தடுக்குமா என பார்ப்போம்.