#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோனி கொடுத்த விருந்தின் மயக்கம் இன்னும் தெளியல போல! பந்தை பிடிக்கவே தடுமாறிய இந்திய வீரர்கள்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பின்ச் மற்றும் கவாஜா இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே விளாச துவங்கினர். இந்திய அணியின் பீல்டிங் இன்றைய ஆட்டத்தில் மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்திலேயே கவாஜா கொடுத்த கேட்சை தவான் கோட்டைவிட்டார்.
அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, விஜய் சங்கர், ராயுடு, ஜடேஜா, கோலி என அனைத்து வீரர்களுமே பல முறை பந்தினை பிடிக்க தடுமாறினர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு இலவசமாகவே பல ரன்களை இந்திய வீரர்கள் விட்டுக்கொடுத்தனர்.
இந்திய அணி இன்று செய்த பீல்டிங்கினை பார்த்தபொழுது அவர்கள் ஒருவித மயக்கத்தில் இருந்தது போலவே இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்த இந்திய அணியினருக்கு தோனி மற்றும் ஷாக்சி தம்பதியினர் தங்கள் இல்லத்தில் சிறப்பு விருந்தினை அளித்தனர். ஒருவேளை அதில் ஏற்பட்ட மயக்கம் அவர்களுக்கு இன்னும் தெளியவில்லை போல.
ஏதோ ஒருவழியாக இமாலய இலக்கை நோக்கி சென்ற ஆஸ்திரேலியா அணியினரை கடைசியில் கட்டுப்படுத்தியதன் மூலம் அவர்களால் 313 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கவாஜா முதல் சர்வதேச ஒருநாள் சதத்தினை கடந்தார்.
பீல்டிங்கில் சொதப்பிய இந்திய வீரர்கள், பேட்டிங்கிலாவது சரியாக ஆடி வெல்வார்களா என்பதை பொருமையாக இருந்து பார்ப்போம்.