#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியின் அதிரடி இளம் ஹாக்கி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு அரசியல் பிரபலங்கள், சினமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு வீரர் மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு ஆணைய மையம் தெரிவித்துள்ளது.
25 வயதான, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மன்தீப் சிங்கிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவருடன் 5 மற்ற வீரர்களுக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6வது இந்திய வீரர் மன்தீப் சிங் ஆவார். இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த மன்ப்ரீத் சிங்(கேப்டன்), சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கிஷன் பகதூர் பதக் ஆகிய 5 வீரர்களுக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டது.