மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய சீருடையில் உற்சாகமாக போஸ் கொடுத்த இந்திய வீரர்கள்! புகைப்படங்கள் உள்ளே
இந்த உலகக் கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளில் இதுவரை எந்த போட்டியிலும் தோல்வி பெறாத ஒரே அணி இந்தியா மட்டுமே. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இங்கிலாந்துடன் மோதுகின்றது.
இந்த உலகக் கோப்பையில் ஒரே நிறத்திலான சீருடை கொண்ட அணிகள் மோதும் பொழுது ஒரு அணி வேறு நிறத்திலான சீருடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஊதா நிறத்திலான சீருடையை கொண்டவை. எனவே இந்த போட்டியின் போது இந்திய அணி வேறு ஒரு நிறத்திலான சீருடை அணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ இந்திய அணிக்கான புதிய சீருடையையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சீருடையை அணிந்து தான் நாளை இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட போகிறது. இந்த சீருடையை இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிமுகம் செய்தார். மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் இந்த சீருடையை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.