#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியானது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர்கள் விபரம்.! தமிழக வீரருக்கு வாய்ப்பு.!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் T 20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
இந்திய அணியின் பிளேயிங் லெவன் வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா.
ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.