மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடாத மழை..! இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது.!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி ஹிமாசலப் பிரேதச மாநிலம், தா்மசாலாவில் இன்று நடைபெற இருந்தது.
ஆனால் திடீர் மழையால் இன்று நடைபெற இருந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடைபெறும் இரண்டாவது ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் ஏற்பட்ட தொடர் தோல்வியை அடுத்து, இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி தற்போது உள்ளது.